பூலாம்பாடி அதிமுக முன்னாள் நகர செயலாளர், ஆ.ராசா முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

schedule
2023-08-20 | 15:06h
update
2023-08-20 | 15:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Poolambadi AIADMK former Town secretary, joined DMK in the presence of A. Raja!

பெரம்பலூரில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.இராசா முன்னிலையில், அ.தி.மு.க பூலாம்பாடி முன்னாள் பேரூர் செயலாளர் – பொதுக்குழு உறுப்பினர் வினோத் உள்ளிட்ட 50 பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இனைந்தனர். ஆ.இராசா.எம்.பி., அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

Advertisement

மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் எஸ்.நல்லதம்பி (மேற்கு), வீ.ஜெகதீசன் (கிழக்கு), பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வலட்சுமி சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், வினோத் தெரிவித்ததாவது:

அதிமுகவில் அடிமட்ட தொண்டனாக 1999ல் இணைந்தேன், பேரூர் செயலாளராக 12 ஆண்டுகளாகவும், அம்மா பேரவை செயலாளராக 5 ஆண்டுகளாகவும், கூட்டுறவு சங்க தலைவராகவும், இருந்ததாகவும்,

இப்போது, அதிமுகவில் வழி நடத்தக் கூடிய தலைவர்கள் இல்லை, முதுகெலும்பற்ற தலைவர்களாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி கொடுக்கும் ஸ்;டாலினை வணங்கி, நம்முடைய மேனாள் அமைச்சர் ஆ.ராசாவின் வழியை பின்பற்றி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாக தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.08.2026 - 03:42:05
Privacy-Data & cookie usage: