பெரம்பலூர் ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை!

schedule
2022-11-08 | 15:42h
update
2022-11-08 | 15:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Poornami Special Pooja at Perambalur Sri Kagannai Ishwarar Temple!

Advertisement

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை இன்று நடந்தது.
விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. மேலும் கோமாதா மற்றும் அஸ்வ பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி , தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ராதா மாதாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:44:03
Privacy-Data & cookie usage: