Power cut notification for Siruvachur and Chettikulam areas
சிறுவாச்சூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு:
சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் ஜுலை.19 (செவ்வாய் கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சிறுவாச்சூர், அயிலூர், தீரன் நகர், கவுல்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, புதுநடுவலூர், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், நீர் உந்து நிலையங்கள் ( அயிலூர், நாரணமங்கலம், காரை, செட்டிக்குளம், பெரகம்பி) ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.