Power Distribution Announcement for Shutdown in PudanSanthai area near Namakkal
நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புதன்சந்தை துணை மின் நிலையத்தில் வரும் 5ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.