Power outage in Perambalur city areas 

பெரம்பலூர், தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பு :

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில், நாளை மறுநாள் ஜூலை 21ந்-தேதி மாதந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, வடக்குமாதவி சாலை, வடக்குமாதவி, சிட்கோ, எளம்பலூர், சமத்துவபுரம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, மின்நகர், துறைமங்கலம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்த உடன், உடனடியாக மின் வினியோகம் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!