Power outage notice at Krishnapuram substation!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மே.16 அன்று செவ்வாய்க் கிழமை நடைபெறுவதால், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, பூம்புகார், முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், வெண்பாவூர், பெரியவடகரை, ஆகிய ஊர்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் மாலதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.