Power outage notice at Perali substation near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரும் நாளை ஜுலை 7 வியாழக் கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், செடுவாசல், கவுல்பாளையம், மருதவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமங்களில் அறிவிக்கபட்ட தினத்தில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யபடும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.