Power outage notice for Alathur and Padalur area
புதுக்குறிச்சி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில், வரும் மார்ச். 9ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அன்று காலை 9.00 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை, புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், சா.குடிக்காடு, தெற்கு மாதவி, கொளக்காநத்தம், அயினாபுரம், சாத்தனூர், வரகுபாடி, நல்லூர், அ.குடிக்காடு, அணைப்பாடி, பாடாலூர், இரூர், தெரணிபாளையம், தெரணி, திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.