Power outage notice for Perambalur urban areas!
பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்க் செல்வன் விடுத்துள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பாராமரிப்பு பணிகள் நாளை டிச.15- (புதன்கிழமை) நடைபெற உள்ளது. பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புதிய பேருந்து நிலையம், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர், உடனடியாக வழக்கம் போல் மின் வினியோகம் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.