Power shutdown notification at Parli Sub power station
பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரும் நவ.4- செவ்வாய்க்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்