மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க முன் வைப்பு நிதி வழங்கும் திட்டம்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-10-29 | 13:01h
update
2021-10-29 | 13:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Pre-deposit scheme to set up Avin Company Dairy Products Sales Center for the alternatively abled: Perambalur Collector!

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க முன் வைப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனைமையம் அமைக்க முன் வைப்பு நிதி பெறாதவராக இருக்க வேண்டும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.11.2021 தேதிக்குள் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 10:33:06
Privacy-Data & cookie usage: