வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சனையில் நஞ்சு அருந்தி விவசாயி தற்கொலை

schedule
2016-03-03 | 16:07h
update
2026-04-23 | 04:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சனையில் நஞ்சு அருந்தி விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(54) விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் கணவன் மனைவியிடையே தகராறு நடந்துள்ளது.

Advertisement

இதனால் மனமுடைந்த குணசேகரன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நஞ்சு அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2026 - 04:30:44
Privacy-Data & cookie usage: