குஜராத் மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகள் இன்று பெரம்பலூருக்கு வந்தது

schedule
2016-01-27 | 15:43h
update
2026-04-10 | 01:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வர உதவி ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன் தலைமையிலான ஒரு துணை வட்டாட்சியர், ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர; 19.1.2016 அன்று குஜராத் சென்றிருந்தனர்.

Advertisement

இவர்கள் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பயன்படுத்த 727 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 860 கட்டுப்பாட்டுக்கருவிகளை இன்று எடுத்துவந்தனர். இந்தக்கருவிகள் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக அடுக்கிவைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெ.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் 21.1.2016 அன்று பீஹார் மாநிலத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துவர சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் 144 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 500 கட்டுப்பாட்டுக்கருவிகளை பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 01:39:20
Privacy-Data & cookie usage: