Precautionary measures to avoid accidents during rain and wind: Perambalur Electricity Board!
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பெரம்பலூர் கோட்டம் மழை, காற்றடி காலங்களில் மின் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும், பொது மக்களிடம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மின் விபத்துக்களையும் அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின் பாதையின் மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, பொது மக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மின் வாரியத்தைச் சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர் மூலம் மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் மின்பாதைஃமின்கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக பணியை மேற்கொள்ள வேண்டும்.
டிராக்டர் மற்றும் லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கதிகமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதைஃமின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடுஃகட்டிடம் கட்டும்போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் மிகவும் கவனமாக கட்டுமான பணியினை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும் போது தரமான வயரிங் சாமான்களை உபயோகித்தும் முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர் பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய விலங்கினங்களை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை மின் நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிபடுத்திய பிறகு பணியை கவனமாக செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றிய தகவலை
பெரம்பலூர் செயற்பொறியாளர் 9445853641, உதவி செயற்பொறியாளர்கள்: பெரம்பலூர் நகரம் 9445853643, பெரம்பலூர் கிராமியம் 9445853644, சிறுவாச்சூர் 9445853645, லப்பைக்குடிக்காடு 9445853646, கிருஷ்ணாபுரம் 9445853647, குன்னம் 9445853648,
உதவி மின்பொறியாளர்கள்: பெரம்பலூர் நகரம் 9445853649, பெரம்பலூர் தெற்கு 9445853650, பெரம்பலூர் 9445853651, வாலிகண்டாபுரம் 9445853652, வேப்பூர் 9445853653, துங்கபுரம் 9445853693, மருதையான்கோவில் 9445853686, அம்மாபாளையம் 9445853655, எசனை 9445853656 குரும்பலூர் 9445853657, வேப்பந்தட்டை 9445853658, நக்கசலம் 9445853659, சிறுவாச்சூர் 9445853661, செட்டிக்குளம் வடக்கு 9445853662, செட்டிக்குளம் தெற்கு 9445853663, பாடாலூர் 9445853664, கொளக்காநத்தம் 9445853665, லப்பைக்குடிக்காடு 9445853666, சின்னார்டேம் 9445853667, வி.களத்தூர் 9445853668, கிருஷ்ணாபுரம் வடக்கு 9445853670, கிருஷ்ணாபுரம் கிராமியம் 9445853671, அரும்பாவூர் 9445853672, பூலாம்பாடி 9445853673, கை.களத்தூர் 9445853674, அலுவலர்களுக்கும்,
வாட்ஸ்அப் 9486111912, மின்னகம் 9498794987, கட்டணம் இல்லா தொலைபேசி 1912 மற்றும் 7094966709 ஆகிய அலைபேசிகள் மூலமும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.