பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்

schedule
2017-09-25 | 15:57h
update
2026-07-03 | 20:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

unidentified vehicle hit a pregnant deer injured near in perambalur

பெரம்பலூர் மாவட்டம், சித்தளி வனவியல் விரிவாக்கம் மையம் பகுதியில் இருந்து இரை தேடி வனத்தை விட்டு வெளியே வந்த 2 வயது மதிக்கதக்க கர்ப்பிணி புள்ளிமான் பெரம்பலூர் அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தது.

Advertisement

அவ்வழியே வந்த பயணிகள் காயத்தால் துடித்து கொண்டிருந்த மானிற்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் தாக்காதவாறு பாதுகாத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு குன்னம் கால்நடைத் துறையினர் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு புள்ளிமானை வனத்தில் விடவும் முடிவு செய்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 20:26:07
Privacy-Data & cookie usage: