மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களுக்கு, இந்திய குடிமைப் பணிகளில் சேர ஆயத்த பயிற்சி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-10-27 | 00:44h
update
2026-06-14 | 13:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Preparatory training for fishing community graduates to join Indian civil services: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

Advertisement

அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆய்வாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து பெரம்பலூர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆய்வாளர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பெரம்பலூர், அலுவலகம், எண்.174/38A, SKC காம்ப்ளக்ஸ், மேல்தளம், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் தொலைபேசி எண். 04329-228699, அலைபேசி எண். 6381344399 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:58:15
Privacy-Data & cookie usage: