கொரொனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு  குன்னம், பெரம்பலூர் எம்.எல்.ஏக்கள் சொந்த நிதியிலிருந்து ரூ. 5லட்சம் வழங்கினர்.

schedule
2020-04-02 | 01:23h
update
2020-04-02 | 01:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Prevention and treatment of Corona viral disease kunnam, Perambalur MLAs own funds of Rs. 5 lakhs Donated

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரொனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ள குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரன் அவரது குன்னம் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர், வேப்பூர், செந்துறை (அரியலூர் மாவட்டம்) ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் தனது சட்டமன்ற தொகுதி 2020 -21 நிதியிலிருந்து ரூ 60 லட்சம் வழங்குவதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.

மேலும், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உணவின்றி வாடும் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்போருக்கு உதவிடும் வகையில் குன்னம் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏக்களான ஆர்.டி.ராமச்சந்திரன், ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தங்களது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம், வழங்கினர்.

படவிளக்கம்: குன்னம் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏக்களான ஆர்.டி. ராமச்சந்திரன், ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உணவின்றி வாடுவோருக்கு சொந்த நிதியில் இருந்து ரூ. லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் சாந்தாவிடம் வழங்கிய போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 22:56:20
Privacy-Data & cookie usage: