தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பெரம்பலூரில் உண்ணாவிரதம்!

schedule
2023-03-18 | 14:52h
update
2023-03-18 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Primary school teachers union fast in Perambalur!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

Advertisement

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாவு, புஸ்பாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் உண்ணாரவிரத போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுசெயலாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விரிவாக எடுத்துக்கூறி நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பலர் பேசினர்.

இந்தபோராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். முன்னதாக மாவட்ட பொருளாளர் புகழேந்தி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் தங்கத்தாய் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 03:40:12
Privacy-Data & cookie usage: