பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்: பயோ பிளாக் குளங்களில் மீன் வளர்ப்பிற்கு ரூ.3 லட்சம் வரை மானியம்: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-08-19 | 16:59h
update
2022-08-19 | 16:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Prime Minister’s Fisheries Development Scheme: Subsidy up to Rs 3 lakh for fish farming in bio block ponds: Perambalur Collector Information!

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2021 – 2022 – திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தலுக்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ. 7.50 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவிகிதம் மானியமாக ரூ.3 லட்சம் மானியத் தொகை வழங்கப்படும். மேற்கண்ட மானியத் தொகையானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

Advertisement

எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர், அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 31.08.2022- க்குள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அரியலூர் அலுவலகம், அறை எண்.234/2வது மேல்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், அரியலூர்-621704. (தொலைபேசி எண்.04329–228699.) மற்றும் பெரம்பலூர் மீன்வள ஆய்வாளர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பெரம்பலூர் அலுவலகம், SKC காம்ப்ளக்ஸ், மேல்தளம், பெரம்பலூர்-621212 (தொலைபேசி எண்.04329–228699, அலைபேசி எண்.6381344399.) என்ற அலுவலக முகவரிகளில் அளிக்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 15:34:30
Privacy-Data & cookie usage: