Private buses run empty due to the Tamil Nadu government’s Vetripayanam
தமிழ்நாட்டை ஆளும் அரசியல் கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதி அள்ளி தெளித்து வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். அதன் ஒரு சாம்பிளாக இலவச பயணங்களை கூறலாம். கடந்த திமுக ஆட்சியில் ஒரு அளவாக நகர பேருந்துகளில் மட்டும் சுமார் 30 கி.மீ தூரம் வரை அளித்த நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று சுமார் 80 கி..மீ வரை அரசு புறநகர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதித்துள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 டெப்போக்களில் இயங்கும் 80 சதவீத பஸ்களில் பெரம்பலூரில் இருந்து சுமார் 80 வரை செல்லாம். இது ஒரு புறம் பெண்களுக்கு பேரூதவியாக இருக்கும்.
இந்நிலையில், தனியாரால், பெரம்பலூரில் இருந்து இயக்கப்படும் விழுப்புரம், சிதம்பரம், கரூர், ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு இயக்ககப்படும் பஸ்களை தவிர பெரும்பான்மையான பஸ்கள் சுமார் 55 கி.மீ தூரமுள்ள திருச்சி, ஆத்தூர், துறையூர், அரியலூர், லப்பைக்குடிக்காடு, கை.களத்தூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி, கள்ளக்குறிச்சி, லால்குடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டது. இந்த பஸ்களை நம்பி டிரைவர், கண்டக்டர், கிளீனர், ஓனர் ஆகியோர் நேரடியாகவும், பெட்ரோல் பங், ஸ்பேர் பார்ட்ஸ், டயர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் உள்பட பலர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பையும் பெற்று வந்தனர்.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு வெற்றிப் பயணம் அறிவித்தன் விளைவாக முதல் நாளே தனியார் பஸ்கள் காலியாக இயக்கப்படுவதுடன், இன்றைய பஸ் ஓட்டம், போட்ட டீசலுக்கு கூட தேறாக நிலை ஏற்பட்டுள்ளது. மினி பஸ்களை போல இனி பெரிய பஸ்களை இயக்குபவர்களும் தனது சொந்த பணத்தில் இருந்தே சினிமா காமெடி போல சம்பளம் வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய வசூல் சம்பவங்கள் தனியார் பஸ் முதலாளிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் தனியார் பஸ்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். ஏற்கனவே, கொரனாவில் இருந்து மீண்ட அவர்கள் டீசல் , டோல் பீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்டவைகளின் விலையேற்ற பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் அடுத்த பேரிடியாக இந்த தனியார் பஸ்களின் பயணங்கள் வெற்றுப் பயணம் அமைந்ததால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் பஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் வெற்றிப் பயணத்தில் பங்கேற்கவும், அவர்களுக்கு டிக்கட் ஒன்று குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து வழங்க வேண்டும். முன்னாள் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திருவிழாக்காலங்களில் தனியார் ஒப்பந்த பேருந்துகளை இயக்கியது போல, வெற்றிப் பயண திட்டத்திலும் இயக்க வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுக்கின்றனர். நடிகர் விவெக் காமெடி போல, யாருமே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ போடுகிற மாதிரி தனியார் பஸ்களின் நிலை ஒரே நாளில் தலைகீழா மாறி விட்டது.