பெரம்பலூர்

அரியலூர் மாவட்டங்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் கிரேஸ் தகவல்!

schedule
2025-06-24 | 16:15h
update
2025-06-24 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Private employment camp for Perambalur – Ariyalur districts; Collector Grace information!

 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தும் – மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.06.2025 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மேலமாத்தூர், ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, மற்றும் டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஒட்டுநர், டெய்லர் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதியுடையோர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

Advertisement

மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்களுடன் 28.06.2025 சனிக்கிழமை காலை 8 மணி முதல் 3 மணி வரை மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில், நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விவரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலை நாடுநர்கள் வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என்றும், மேலும் விவரங்களுக்கு 94990 55913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 06:01:44
Privacy-Data & cookie usage: