Private employment camp; Perambalur Collector Announcement!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.27 அன்று ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் நிறுவனம் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு டிரைவர், தையல், 8ஆம்; வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக்., ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுனர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடனுதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்களுடன் அன்று காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் முகாமில் நேரடியாகவோ அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.