Private Sector Employment Camp in Perambalur: Collector Call!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.09.2023 அன்று பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. வேலை நாடுநர்கள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கற்பகம் செய்திக்குறிப்பில் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ரோவர் கல்விக்குழுமம் இணைந்து நடத்த உள்ளது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள MRF நிறுவனம், விரைவில் தொடங்கப்படவுள்ள கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவைகளும் மற்றும் சென்னை காஞ்சிபுரம், ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளனர்.

ஓட்டுநர், தையல், 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் (OMCL) பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடனுதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், சுயவிபரம் (பயோடேட்டா) மற்றும் கல்விச்சான்றுகளுடன் 09.09.2023 சனிக்கிழமை காலை 08.00 முதல் மாலை 3.00 மணி வரை பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம், இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். இவ்வேலைவாய்ப்பு முகாம் பணிவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!