Private Sector Employment Camp in Perambalur; It happened under the leadership of the Collector!

பெரம்பலுார் மாவட்ட தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் கிறிஸ்டியன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது.

50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் .சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் வெங்கடபிரியா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், தகுதியுடைய அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

பணிநியமன ஆணை பெறும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பணியாற்றி உங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன், என்றார்.

முன்னதாக, எம்.எல்.ஏ பிரபாகரன் பேசியதாவது: முதன்மை மாநிலமாக நமது தமிழகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில், எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. படித்த இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ப பணி கிடைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த தனியார் துறை வேலைவாய்பபு முகாம் நடக்கிறது.

கிடைக்கும் பணியினை உங்கள் வெற்றிப் பாதையின் தொடக்கப் புள்ளியாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடக்க உள்ள பாதைக்கான கடவுச்சீட்டாக இந்த பணிவாய்ப்பை நினைத்துக்கொள்ளுங்கள். வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அமையும்போது உங்கள் திறமையினை மெருகேற்றிக்கொண்டு மேலும் மேலும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகின்றேன், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 30 நபர்களுக்கு முதற்கட்டமாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிறிஸ்டோபர், செயலர் கி.மித்ரா, பெரம்பலுார் நகராட்சி சேர்மன் அம்பிகா இராஜேந்திரன், வைஸ் சேர்மன் ஹரிபாஸ்கர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ராஜ்மோகன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!