பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-10-13 | 16:36h
update
2026-10-13 | 16:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Private sector job fair in Perambalur; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ,Flipkart போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதி மற்றும் வயது அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம்வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன காலிப்பணியிட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

Advertisement

எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 23.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணிமுதல் 2.00 மணிவரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 94990 55913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.10.2026 - 17:35:01
Privacy-Data & cookie usage: