பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் சட்ட உதவி உடன்கலந்த நன்னடத்தை அலுவலர் பணி

schedule
2017-12-14 | 00:07h
update
2026-07-04 | 12:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Probationary Officer working in the Perambalur District Child Protection Unit

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்ட உதவி உடன் கலந்த நன்னடத்தை அலுவலர் (ஒரு பணியிடம்) பணியிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளது,

Advertisement

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளர் நலன் தொடர்பான ஏதேனும் ஓர் துறையில் சட்டப்பணியில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

01.11.2017 அன்று 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 62 வயதிற்குட்பட்ட அரசு பணியில் ஓய்வு பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் தகுதியில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.21,000- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.perambalur.tn.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.12.2017 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:04:14
Privacy-Data & cookie usage: