Professor of Coimbatore Agricultural University in Perambalur area reviewed the root cause disease in cotton

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் அனுக்கூர் நெய்குப்பை, பசும்பலூர் மற்றும் நெற்குணம் கிராமங்களில் பருத்தியில் வேரழுகல் நோய் குறித்து கோயம்புத்தூர் வேளாண் பல்கலைகழக பேராசிரியர்கள் இன்று ஆய்வு செய்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 செப்டம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 395 மி.மீ. தற்சமயம் வரை 574.8 மி.மீ மழை பெய்துள்ளது.

தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையினால் மண்ணில் ஈரப்பதம் அதிகளவில் உள்ளது. இந்த சீதோஷ்ன நிலையில் மண்ணின் வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி ஆக இருக்கும்.

இந்த சூழ்நிலை பருத்தியில் வேரழுகல் நோய் தாக்குவதற்கு உகந்ததாகும். தற்பொழுது இந்நோய் தாக்குதல் பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக தென்படுகிறது.

பின்னர், வேளாண்மை பல்கலைகழக உதவி பேராசிரியர்கள் இந்நோய் பற்றி கூறியதாவது:

இந்நோய் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளில் முளையிடும் நாற்றுக்களின், விதையிலை கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும். தண்டின் அடிப்பகுதியில் பட்டை நார் நாராக உரிந்துவிடும். வேர்ப்பகுதி முழுவதும் சிதைந்து செடி முழுவதும் வாடிவிடும். செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 2.5கிலோ டிரைகோடெர்மாவிரிடியை 50 கிலோ அங்கக உரத்துடன் கலந்து வயலில் மண்ணின் மேற்பரப்பில் இட வேண்டும் (அல்லது) கார்பன்டசிம் 20 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் (அல்லது) காப்பர்ஆக்சிகுளோரைடு 20 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் (அல்லது) நேட்டிவோ 10 மி.லி 10 லிட்டர் தண்ணீரில் (அல்லது) டெபுகோனசோல் 10 மி.லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட பருத்தி செடியின் வேர்ப் பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள செடிகளுக்கும் வேர்ப்பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும். இதனால் இந்நோய் அருகில் உள்ள செடிகளுக்கு பரவுவதை தடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் பருத்தி பயிரை வேரழுகல் நோயிலிருந்து காப்பாற்றலாம்,என தெரிவித்தனர்.

இதில், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வல்லுநர் குழுவைச் சேர்ந்த உதவி பேராசிரியர்கள் ப.லதா, ந.பிரேமலதா, க.செங்குட்டுவன், வேப்பந்தட்டை பருத்தி ஆராய்சி நிலைய பேராசிரியர் மெய்யழகன், உதவி பேராசிரியர் பாரதிகுமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!