உயர்நீதிமன்ற உத்தரவின் படி சீமக்கருவேல மரங்களை பெரம்பலூர் மாவட்ட நில உரிமையாளர்கள் அகற்ற அறிவிப்பு

schedule
2017-02-23 | 17:13h
update
2026-06-26 | 22:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Prosopis juliflora trees plea to the High Court ordered the removal of the district landowners notification

பெரம்பலூர்.பிப்.23 – பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத்துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அழிக்கப்பட்டு வருவது குறித்தும், இந்த நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய செயல்பாடுகள் தனியார் நிலங்களில் உள்ள சீமக்கருவேல மரங்களை அழிப்பதற்கு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர;வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சிதலைவர் பேசியதாவது, மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுப்புறத்திற்கும், வேளாண்மைக்கும் கேடு விளைவிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிப்பதை பொதுமக்கள் தங்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.

Advertisement

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி , பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு பல்வேறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுப்பணித்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நீர;நிலைகளிலும் அதன் கரைகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களையும், நெடுஞ்சாலைத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள சாலையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சீமைக்கருவேல மரங்கள் வறண்ட சூழலையும் ஏற்று வளரக்கூடியது. கடும் வறட்சி ஏற்பட்டாலும் இந்தவகை மரங்கள் வாடாது. நிலத்தடி நீரை பன்மடங்கு ஆழம்வரை சென்று உறிஞ்சும் தன்மை கொண்ட சீமைக்கருவேல மரங்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகிறது.

இந்த வகை மரங்கள் தான் வளர்ந்துள்ள நிலத்தை வேறு ஏதும் விளையாத நிலமாக மாற்றிவிடும். சீமைக் கருவேல மரங்களை இப்படியே வளரவிட்டால் நிலங்களில் மகசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இப்படி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுப்புறத்திற்கும், வேளாண்மைக்கும் கேடு விளைவிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிப்பது பொதுமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே, பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு சொந்தமான நிலங்களில் வளா;ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை வேருடன் அகற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, சம்மந்தப்பட்ட துறைகள் மூலமாக சீமைக்கருவேல் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவின தொகையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமிருந்து இரண்டு மடங்காக வசூல் செய்யப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் ந.கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 22:51:32
Privacy-Data & cookie usage: