பேருந்து கண்டன உயர்வை கண்டித்து பெரம்பலூர் அதிமுக அம்மா அணியினர் கண்டன பொதுக்கூட்டம்

schedule
2018-01-31 | 18:42h
update
2018-02-02 | 09:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

protest against the increase in bus fare tamil nadu : ADMK Amma wing conducted Condemned General Meeting in perambalur

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக அம்மா அணியின் (டிடிவி தினகரன்) மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில், தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

Advertisement

பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் என்.எம்.செல்வக்குமார் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் என்.கிருஷ்ணகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் என்.சேகர் வேப்பூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் செ.வீரமுத்து உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான வ.து.நடராஜன், தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் சல்மான், கோவை. ராஜகோபால், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

பெரம்பலூர் மாவட்ட அணி பொறுப்பாளர்கள், பேரூர், கிளைக் கழக பிரதிநிதிகள், தொண்டர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 14:12:04
Privacy-Data & cookie usage: