தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தால் குடிநீர் வினியோகிக்க நடடிவக்கை

பெரம்பலூர் நகராட்சி

schedule
2017-04-20 | 13:20h
update
2026-06-27 | 09:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Provision of information by telephone to conducting water supply – Perambalur municipality

பெரம்பலூர் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டில் பருவமழை சராசரி அளவைவிட மிகவும் குறைவாக பெய்த காரணத்தினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து. தமிழகம் முழுவதும் வறட்சி ஏற்பட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கும் முக்கிய ஆதாரமான காவேரி குடிநீர் பரப்பும் வறண்டு போய்விட்டதால் காவேரி குடிநீர் விநியோகித்திலும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

Advertisement

மேலும், நகராட்சிக்கு நீர் ஆதாரமான 24 கிணறுகளில் பெரும்பான்மையான கிணறுகள் வறண்டுவிட்ட காரணத்தினால், குடிநீர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது நிலவுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டு சூழ்நிலையை பொதுமக்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு பொருத்துக் கொள்வதுடன், குடிநீரை வீண்விரயம் செய்யாமல் சிக்கனமாக செலவு செய்யவும், குடிநீர் தேவை ஏற்படின் சாலை மறியல் போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடாமல் நகராட்சி அலுவகத்திற்கு தொலைபேசி எண்.04328 225 285-ல் தொடர்பு கொண்டு குடிநீர் தேவை குறித்து தெரிவித்தால் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடடிவக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 09:58:24
Privacy-Data & cookie usage: