Public Administration Committee of the School of Administrative Officers
ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாநில தலைவர் நீதி மணி சிறப்புரையாற்றினார்.
சங்க ஆலோசகர் ஜோசப் அண்டோன் பெர்ணான்டோ , மாவட்ட பிரச்சார செயலாளர் சுந்தரேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் தருமலிங்கம் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராமசந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத், மாநில பொருளாளர் முருகன், மாநில அமைப்பு செயலாளர் குலாம் ரபீக் ஆகியோர் பங்கேற்றனர். பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை ரத்து பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.