குன்னம் தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை

schedule
2017-05-11 | 17:45h
update
2026-06-24 | 11:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் வட்டாசியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவாய்துறையை சேர்ந்த பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

Advertisement

வறட்சியால் தாகத்துடன் வரும் மக்களுக்கு தாகத்தை நீர்க்க குன்னம் வட்டாசியர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏதும் இல்லை. அருகே விலைக்கு வாங்கி குடிக்கவும், கடைகளும் இல்லை. மேலும், தண்ணீர் வாங்க செல்ல வேண்டுமானல் சுமார் 1.கி.மீ தூரம் சென்று வர வேண்டும். இதற்காக கடும் தாகத்துடனே அலுவலர்கள் வரும் வரையோ, அல்லது அலுவலர்கள் பணி முடித்து தரும் காத்துகிடக்கின்றனர். எனவே, குன்னம் வட்டாசியர் அலுவலத்தில் வந்து செல்லும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 11:38:40
Privacy-Data & cookie usage: