Public demand for removal of banned Air Horns in private buses
பெரம்பலூரில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹார்ன்கள் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹார்ன்காளால் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் , வாகனங்களை இயக்கும் போது சாலைகளில் ஹார்ன்கள் ஒலிக்கவிடும் போது பிற வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்வதுடன் நிலை குலையவும், செய்கின்றனர்.
மேலும், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தங்களில் அனுமதிக்கப்பட்ட டெலிபல் அளவை விட ஒலி எழுப்புவதால் காதை பிளக்கிறது.மேலும், தடை செய்யப்பபட்ட இடங்களான மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகிலும், ஏர் ஹாரனை ஒலித்து பொதுமக்களை அலற விடுகின்றனர்.
இதே போன்று தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளிலும், ஒலிக்கப்படும் ஏர்ஹாரன்கள் எழுப்பப்படும் அளவுக்கு அதிகமான சத்தத்தால் சாலையில் செல்வோரை பயமுறுத்துவதாக உள்ளது.
எனவே தடை செய்யப்பட்ட ஏர்ஹாரனை தனியார் போக்குவரத்து பேருந்துகள், மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளில் உள்ள ஏர்ஹாரனை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.