Public grievance redressal camp related to food supply: Perambalur Collector information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் கிராமத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை (கி) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (மு.கூ.பொ), தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் 10.12.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைக் தெரிவித்து, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.