உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2024-06-14 | 13:51h
update
2024-06-14 | 13:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public grievance redressal camp related to food supply: Perambalur Collector notification!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், அருமடல் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், குன்னம் வட்டம், பெண்ணக்கோணம் (வ) கிராமத்தில் சார் ஆட்சியர், பெரம்பலூர் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி (தெ) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையிலும் 15.06.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 13:27:57
Privacy-Data & cookie usage: