பெரம்பலூர் அருகே குடிபோதையில் சென்ற வாலிபருக்கு தர்ம அடி

schedule
2017-11-21 | 19:53h
update
2026-07-04 | 08:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

public hit to the young man who went drunk near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38), விஜயகலா( வயது 35) தம்பதியினரின் மகள் தன்ஷிகா(6). இவர் இன்று மாலை வீட்டருகே வழக்கம் போல் விளையாடி கொண்ருந்தார்.

அப்போது அவ்ழியே குடி போதையில் வந்த வாலிபர் ஒருவர் தன்ஷிகாவிடம் பேச்சு கொடுத்து அழைத்து செல்ல முயன்றுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரிடமிருந்து சிறுமி தன்ஷிகாவை மீட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

மேலும், சிறுமியை அழைத்து செல்ல முயன்ற வாலிபரை சரமாரியாக தாக்கி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பூட்டி வைத்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த தாய், தந்தையரை அழந்த ஆதரவற்ற ராஜமாணிக்கம்( வயது 28), என்பதும், கொத்தனார் வேலை பார்த்து வருவதும், அம்மாபாளையம் கிராமத்திலுள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தி விட்டு குடிபோதையில் வந்த போது சிறுமியை கண்டதும், அன்பின்பால் பேச்சு கொடுத்ததை தவறாக புரிந்து கொண்ட பொது மக்கள் சிறுமியை கடத்த முற்பட்டதாக நினைத்து சரமாரியாக தாக்கியது தெரிய வந்தது.

இதனையடுத்து ராஜமாணிக்கத்தை போலீசார் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, அறிவுரை வழங்கி நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அம்மாபாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 08:37:02
Privacy-Data & cookie usage: