பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான பொது பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் நியமனம்!

schedule
2024-03-27 | 18:12h
update
2024-03-27 | 18:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public Observer, GENERAL Observer Appointed for Perambalur Parliamentary Constituency!

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக (GENERAL OBSERVER) ராஜேந்திரகுமார் வர்மா, காவல்துறை பார்வையாளராக (POLICE OBSERVER) மனிஷ் அகர்வால இருவரையும் நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தேர்தல் பொதுப்பார்வையாளர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அறை எண் 1ல் தேர்தல் முடியும் வரை தங்கியிருப்பார். தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க விரும்புவோர், பெரம்பலூர் பராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர்களை 9363318089 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது தினமும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை அரசு சுற்றுலா மாளிகையில் நேரில் சந்தித்தோ புகார்களை தெரிவிக்கலாம்.

காவல்துறை பார்வையாளர் அவர்களை 9345329270 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 14:10:24
Privacy-Data & cookie usage: