குறை அழுத்த மின்சார வினியோகத்தை கண்டித்து பெரம்பலூரில் பொதுமக்கள் சாலைமறியல்!

schedule
2019-05-30 | 14:05h
update
2019-05-30 | 14:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public road traffic in Perambalur condemning low Voltage power Supply By TNEB

பெரம்பலூர் நகராட்சி 11வது வார்டு, வெங்கடேசபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்வினியோம் ஏற்பட்டதால் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் இயங்கவில்லை. இது குறித்து மின்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது. மின் துறை சீர் செய்வதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும், நேற்று மாலை ஏற்பட்ட குறை அழுத்தம் கடுமையாக இருந்ததோடு, மின்விளக்கு கூட எரியாத அளவிற்கு மின்வாரம் வந்ததுள்ளது. இது குறித்தும் மீண்டும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைக்க முயற்சி செய்தும், சரிசெய்ய முடியாமல் மின்வாரிய பணியாளர்கள் காலதாமத்தித்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்த மக்கள் மின்விசிறி கூட இயங்கவில்லை, மின்மோட்டார்கள் இயங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று திரண்டு மின்வாரியத்தை கண்டித்து பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் வெங்கடேசபுரம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய், மின்வாரியத்துறையினர் சமாதன பேச்சு வார்த்தை நடத்தி உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் பெரம்பலூர்- துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 23:58:16
Privacy-Data & cookie usage: