காருகுடியில் தரமற்ற சாலை பணிகள் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

schedule
2017-08-29 | 19:57h
update
2026-09-16 | 02:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Public Siege denounced the officers of non-standard road works in the road

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட காருகுடி – முருக்கன்குடி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.

Advertisement

காருகுடி – முருக்கன்குடி 2அரை கிலோ மீட்டர் தூரம் சாலை போடப்பட்டு வருகிறது. இந்த சாலையின் குறுக்கே பல இடங்களில் குடிநீர் பைப் லைன்கள் உள்ளன. இந்த பைப்லைன்களை சரிசெய்யாமல் அப்படியே அதன்மீது ஜல்லிகள் கொட்டப்படுவதால் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகிறது.

இந்நிலையில் ரோடு போட தார் ஊற்றினால் அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சாலை ஒரங்களில் சரியான முறையில் எர்த்ஒர்க் செய்யப்படாததால் பல இடங்களில் ரோடுகளில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. தரமற்ற சேறு கலந்த சின்ன ஜல்லிகளை கொட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது : பலமுறை வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதே நிலை தொடர்ந்தார் உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

அப்பகுதியில் அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன் எந்திரத்தையும் பொதுமக்கள் சிறைப்பிடித்து ஏரியில் இருந்து வெளியேற்றினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 02:44:15
Privacy-Data & cookie usage: