பெரம்பலூர், குன்னம் தொகுதிகளின் 5,71,748 பேர்கள் கொண்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!

schedule
2024-01-22 | 08:16h
update
2024-01-22 | 08:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Publication of final voters list of 5,71,748 people of Perambalur, Kunnam constituencies!

இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான க.கற்பகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

Advertisement

147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,98,750 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,45,293 ஆண் வாக்காளர்களும், 1,53,445 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,72,998 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,35,008 ஆண் வாக்காளர்களும், 1,37,990 பெண் வாக்காளர்களும், 0 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5,71,748 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,80,301 ஆண் வாக்காளர்களும், 2,91,435 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

புதிதாக 1.64% வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 22.01.2024 முதல் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. எனவே, வாக்காளர் தொடர் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் 22.01.2024 முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் படிவம் 6, 7 மற்றும் 8 அளித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படடுள்ளது.

இந்நிகழ்வில் வருவாய் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Perambalur News Whatsapp Link ;

https://chat.whatsapp.com/CgjmTIRZKA6749dNr6APO1

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 15:04:46
Privacy-Data & cookie usage: