பெரம்பலூர் அருகே விபத்து : பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தலைநசுங்கி பலி

schedule
2017-03-28 | 08:25h
update
2026-06-27 | 09:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

PWD assistant engineer killed in an accident near in perambalur

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தலைநசுங்கி பலி

பெரம்பலூர்.மார்ச்.28- பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பொதுப்பணிப்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் கண்டெயினர் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணியன். (வயது 58). இவர் இன்று சுமார் காலை 10.30 மணியளவில் பணிநிமித்தமாக பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருமடல் சாலை பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரிக்கு வழிவிட சாலையில் இருந்து இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது சாலையின் அருகே பள்ளத்தில் இருந்த சரளைக்கற்கள் மீது வண்டி ஓடிய போது நிலைத்தடுமாறிய உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் சாலையின் மீது விழுந்தார், பின்னால் வந்த கண்டெயின்லர் லாரி பாலசுப்பிரமணியன் மீது ஏறியது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

விபத்தை ஏற்படுத்திய வெளி மாநில கண்டெயினர் லாரி நிற்காமல் சென்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பைக் சென்று விரட்டி சென்று லாரியை மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கண்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 09:55:04
Privacy-Data & cookie usage: