பயிர் அறுவடை பரிசோதனைகள் செய்ய தற்காலிகமாக பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியான பணி நியமன ஏஜென்சிகள் விண்ணப்பிக்கலாம்; பெரம்பலூர் கலெக்டர்

schedule
2020-12-10 | 12:26h
update
2020-12-10 | 12:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Qualified employment agencies may apply to hire temporary staff to perform crop harvesting tests; Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திருந்திய பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித்தேர்வு முகமை மூலம் (Placement Agency) நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளின் தேர்வுப்பணி அறுவடைப்பணி மற்றும் அதைச்சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு, கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து இப்பணியை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அலுவலர்களும் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவர். மேற்கண்ட பணியிடங்கள் யாவும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.15,050- வீதம் பணித் தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.

எனவே, இப்பணியினை மேற்கொள்ள தகுதி வாய்ந்த பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன ஏஜென்சிகள், பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்களை அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவை கட்டணம் ஆகியவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு டிச.24. அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 01:18:46
Privacy-Data & cookie usage: