பெரம்பலூர் அருகே தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்.

schedule
2020-07-22 | 04:52h
update
2020-07-22 | 04:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

R.T. Ramachandran MLA provides relief to families who lost their homes in a fire near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசூர் கிராமத்தில் நல்லசாமி – பாக்கியம் என்ற தம்பதியினரின் வீடு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையானது. இதனால், வீட்டில் இருந்த ரொக்கப்பணம், ஆடை, ஆவணங்கள் உள்ள சாமான்கள் எரிந்து நாசமானது. இதனால் நிற்கதியான அவர்கள் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். இதை அறிந்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, கண்ணீர் விட்ட அக்குடும்படுத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, துணிமணிகள், ரொக்கம் ரூ. 25 ஆயிரம் வழங்கினார். எரிந்து போன குடிசை வீட்டிற்கு பதிலாக தீப்பிடிக்காத கான்கிரீட் கட்ட உதவ அங்கிருந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரை செய்தார். பின்னர், பக்கத்து வீடு தீவிபத்தால் பாதிக்கப்பட்டதற்கு வேலு -பழனியம்மாள் தம்பதியினருக்கு ரூ.10 ஆயிரம் வீட்டை சீரமைக்க நிவரணமாக வழங்கினார். பெற்றுக் கொண்ட அவர்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

அப்போது வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், வேப்பூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் காடூர் ஸ்டாலின், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் பெருமாள், எழுமூர் ஒன்றிய கவுன்சிலர் அழுகுதுரை, சித்தளி நாகராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 03:37:35
Privacy-Data & cookie usage: