பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையம் திறக்காததால் பயணிகள் அவதி

schedule
2017-03-10 | 08:21h
update
2026-09-23 | 13:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

railway reservation center not opened at the In Perambalur news bus passengers sufffered

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் தொடர்ந்து பல நாட்களாக திறக்கப்பட்டதால், அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரயில் முன்பதிவு மையத்தில் பொதுமக்கள் டெல்லி, சென்னை, மும்பை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத், உள்ளிடட நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக முறையாக திறக்கப்படாததால் ரயில் சேவையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள், வசதியானவர்கள் ஸ்மார்ட் போன் மூலம் பதிவு செய்து பயணித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் முன்பதிவு செய்து பயணிப்பதில் சிரமம் உள்ளதால் முறையாக தொடர்ந்து முன்பதிவு மையத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 13:40:32
Privacy-Data & cookie usage: