பெரம்பலூரை தவிர மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை! ஆடிப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!

schedule
2022-07-20 | 13:46h
update
2022-07-20 | 13:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain in many parts of the district except Perambalur! Aadi season farmers happy!

Advertisement

தலைநகரான பெரம்பலூரைத், தவிர மாவட்டத்தின் பிறபகுதிகளில் இன்று மழை ஆங்காங்கே தொடர்ந்து பெய்து வருகிறது.

இன்று பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள எசனை கீழக்கரை, உள்ளிட்ட பச்சை மலைத் தொடர் பகுதிகள், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அரசலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியத்திலும் மழை பெய்து வருகிறது.

இதனால், வானம் பார்த்த பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், உள்ளிட்ட தானிய பருப்பு வகைகள், எண்ணெய் வித்துளான ஆமணக்கு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

தற்போது கோடை உழவு முடித்து, வயல்களை தயார்ப்டுத்தி உள்ள உழவர்கள் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வத்துடன் உள்ளதால் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:09:56
Privacy-Data & cookie usage: