Rain in the Perambalur district, flood in the rivers: people’s happiness

தொண்டைமாந்துறை அருகே பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


பெரம்பலூர் மாவட்டத்தில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை புயலாக (பேத்தே) மாறி உள்ளது. அதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திலும் பரவலாக ஆங்காங்கே நேற்றிரவு முதலே மழை பொழிந்து வருகிறது.

மலையாளப்பட்டி


இதனால், கோரையாறு, மலையாளப்பட்டி, பூமிதானம், கொட்டாரகுன்று அரும்பாவூர், தழுதாழை பூலாம்பாடி பகுதிகளில் பெய்த மழையாலும், பச்சைமலையில் பெய்து வரும் வரும் மழையால் கோரையாறு அருவியில் வெள்ளப்பெருக்கும், கல்லாறு, வெள்ளாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆங்காங்கே பாலத்திற்கு மேல் தண்ணீர் மிதந்து செல்கிறது.

விசுவகுடி நீர்த்தேக்கம்

விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். மேலும், பாசனம் உள்ள கிணறுகளை கொண்டு நெல்நடவிற்காக நன்சை ஓட்டி சேறடித்து வருகின்றனர். மானாவரி பயிரான மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளர தொடங்கி உள்ளன.

பெரம்பலூரில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ:

பெரம்பலூர் 13, வேப்பந்தட்டை 24, கிருஷ்ணாபுரம் 24, தழுதாழை 54, வி.களத்தூர் 1, லப்பைக்குடிக்காடு 8, அகரம்சீகூர் 14, புதுவேட்டக்குடி 11, எறையூர் 21, பாடாலூர் 9, செட்டிக்குளம் 6, என மொத்தம் 185 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 16.82 மில்லி மீட்டர் ஆகும்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!