Rain in various places in Perambalur district: Lightning- Cow kills!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பலத்த இடி மின்னல் சத்தத்துடன் சுமார் 3 மணிநேரம் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த பூமியை குளிர்வித்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள், கால் நடைகள் வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடி- மின்னல் தாக்கியதில், துறைமங்கலத்தை சேர்ந்த சிதம்பரம் மகன் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான பசு மாடு பலியானது.

பதிவான மழை அளவு விவரம் (மி.மீ) பெரம்பலூர் 87, செட்டிகுளம் 75, பாடாலூர் 94, அகரம்சிகூர் 2, லப்பைக்குடிக்காடு 1, புதுவேட்டக்குடி 40, எறையூர் 7, கிருஷ்ணாபுரம் 7, தழுதாழை11, வி.களத்தூர் 5, வேப்பந்தட்டை 7, மொத்த மழையளவு 35.00. மி.மீ. சராசரி மழையளவு 30.45. மி.மீ.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest Tamil News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!