Rain Shower in Perambalur farmers happy with the 3rd day!
பெரம்பலூரில் 3வது நாளாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவ மழை பொய்த்தால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சியால் பயிகள் வாடி வருகின்றன. மேலும், ஆடு, மாடு, எருமை போன்ற கால்நடைகளும், வனவிலங்குகளும், பறவைகளும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தண்ணீரை தேடி அலைந்து திரிந்து வருகின்றன. விவசாயிகள் சாகுபடி செய்த கால்நடை தீவனம் மற்றும் மரமட்டைகளுக்கு போதுமான தண்ணீர் பாசனம் செலுத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் நகரத்தில் வசித்து வருபவர்களின் வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் வாரம் ஒன்றிற்கு ரூ. 700 முதல் 1400 வரை தண்ணீரை பணம் கொடுத்து டேங்குகளில் வாங்கி பயன்படுத்தி வரும் வேளையில், மூன்றாவது நாளாக இன்று காலை முதல் விட்டு விட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வருவதால் அனைத்து தரப்பினரும் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழை தற்போது முழுமையான தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியாவிட்டாலும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும், வனவிலங்குகளுக்கும், சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் தவித்து வரும் உழவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் : பெரம்பலூர் 13 மி.மீ, வேப்பந்தட்டை 9 மி.மீ, தழுதாழை 6 மி.மீ, பாடாலூர் 5 மி.மீ என மொத்தம் 36 மி.மீ பதிவாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 7.20 மி.மீ
இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ) : பெரம்பலூர் 7, செட்டிக்குளம், 4, வேப்பந்தட்டை 0, தழுதாழை 0 என மொத்தம் 13 மி.மீ பதிவாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர், பசும்பலூர் உள்ளிட்ட எறையூர், மங்கலமேடு, குன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதுமான அளவிற்கு வானிலை மையம் மழைமானி அமைக்காததால் பெய்த மழை பதிவாகவில்லை.