Rainfall detail in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகப்படியான மழை பெய்தது. இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :
பெரம்பலூர் 25, வேப்பந்தட்டை 25, தழுதாழை 28, பாடாலூர் 25, செட்டிக்குளம் 18, எறையூர் 10, லப்பைக்குடிக்காடு 23, அகரம்சீகூர் 27, கிருஷ்ணாபுரம் 16, வி.களத்தூர் 14, புதுவேட்டக்குடி 20, என மொத்தம் 231 மி.மீ பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21 மி.மீ ஆகும் .