ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; நாமக்கல்லில் 69 கிலோ கேக் வெட்டிகொண்டாட்டம்

schedule
2018-12-13 | 15:07h
update
2026-04-21 | 20:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rajinikanth’s birthday party 69 kg cake cuttings in Namakkal

சினிமா நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல்லில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 69 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நாமக்கல் மணிக்கூண்டு அருகில் ரஜினிகாந்த் 69 வயதை குறிக்கும் வகையில் 69 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சார்பு அணிகள் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களுக்கு பிரட்,ஜூஸ், பழங்கள் வழங்கப்ப்டடது.

இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இணை செயலாளர் அசோகன், துணை செயலாளர்கள் மோகன், ஹரஹரன், செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், சுப்பிரமணி, தம்பிதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப், மகளிர் அணி செயலாளர் புனிதா, நகர செயலாளர் மோகன், துணைசெயலாளர் பூஜா அசோக், இணை செயலாளர் ஆனந்த பாலாஜி உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்கலந்துகொண்டனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 20:46:55
Privacy-Data & cookie usage: